நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு, இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜீவன் தொண்டமான் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் ஊடாக அனைத்து மக்களுக்கும் பல சேவைகளை செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் ஜீவன் தொண்டமான் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக மக்களுக்காக சிறந்த சேவையை ஆற்றியதன் காரணமாக கூடுதலாக நீர்வழங்கல் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு அமைச்சுகளை பயன்படுத்தி மக்களுக்கு முழு சேவையை ஜீவன் தொண்டமான் சிறப்பாக செய்வார் என்பதில் இ.தொ.கா முழு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்