நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றுயை சமாளிக்க நாவலப்பிட்டி பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 400 படுக்கைகள் கொண்ட முழுமையான கொரோனா சிகிச்சை மையத்தை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த கொவிட் சிகிச்சை மையம் நாவலப்பிட்டியில் உள்ள சம்மர் செட் தேயிலை தொழிற்சாலையுடன் இணைந்து கட்டப்பட்டு வருகிறது.
இராணுவத்தால் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வரும் இந்த கட்டிடம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு மே 20 ஆம் திகதி திறக்கப்படும். இது கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 400 பேருக்கு தேவையான வசதிகளை வழங்கும்.