மெக்சிகோவில் அழகிப்போட்டியில் வென்ற ஒரு அழகிய இளம்பெண், நான் வெறும் முக அழகு கொண்ட பெண் அல்ல என்று கூறியிருந்த செய்தியுடனான புகைப்படங்கள் பத்திரிகைகளில் வலம் வந்தன.இப்போது Laura Mojica Romero (25) என்ற அதே இளம்பெண்ணின் புகைப்படங்கள் மீண்டும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
ஆனால், இம்முறை வெளியாகியுள்ளவை, அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டபின் சிறைக்கு செல்வதற்காக எடுக்கப்பட்ட படங்கள்!அழகிப்போட்டியில் வென்றபோது பெண்களுக்கெதிரான வன்முறைக்கெதிராக போராட இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இப்போது அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் தெரியுமா? பயங்கர கடத்தல் கும்பலில் உள்ள மூன்று பெண்களில் ஒருவர் என அடையாளம் காணப்பட்டு, ஐந்து ஆண்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார் Laura.Laura மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 50 ஆண்டுகள் வரை அவர் சிறையில் செலவிட நேரிடலாம்.