தமிழகத்தில் காதலனுடன் வீடியோ அழைப்பில் பேசி கொண்டே உயிரை விட்ட இளம்பெண் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அந்தோணி ஜெஸ்டின். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மரிய சுசிலா. இவர்களுக்கு பிராட்வின் நிபியா (21) என்ற மகளும், எக்சன் ஜெதீஸ் தேவ் என்ற மகனும் இருந்தனர்.
இதில் நிபியா நர்சிங் பயிற்சி மாணவியாக பணியாற்றிய நிலையில் இளைஞருடன் காதலில் விழுந்தார். காதலனிடம் நிபியா மணிக்கணக்கில் பேசி வந்ததாகவும் தெரிகிறது.
இதனை உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதற்கிடையே அந்த காதலில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக நிபியா, தன்னுடைய ஸ்டேட்டசில் தற்கொலை செய்து கொள்ள போவதாக பதிவிட்டு வந்ததாகவும் தெரிகிறது.இந்தநிலையில் நேற்று நிபியா தன்னுடைய வீட்டில் இருந்தபடி காதலனை, வீடியோ அழைப்பின் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.
இதனை நீ நேரில் பார் என்று தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காதலன், செய்வதறியாமல் திகைத்தார். அதே சமயத்தில் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டே மிபியா தூக்கு கயிறை மாட்டியதாகவும் தெரிகிறது.
பதறிபோன காதலன், அவருடைய நண்பரை தொடர்பு கொண்டு மிபியாவை எப்படியாவது காப்பாற்றும்படி கதறி அழுதுள்ளார். ஆனால் மிபியாவை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.
தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து காதல் பிரச்சினை காரணமாக மிபியா தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் இறப்பதற்கு முன்பு மிபியா எழுதிய உருக்கமான கடிதத்தை பொலிசார் கைப்பற்றினர். இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், மன்னிச்சிடுங்க… என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க, நான் காதலுக்கு தகுதியானவள் கிடையாது.
மன்னிச்சிடு பாப்பு, மன்னிச்சிடுங்கள் அப்பா, அம்மா, தம்பி ஜெதீஸ் என எழுதப்பட்டிருந்தது.
மேலும் இந்த கடிதம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.