நாட்டில் தற்போதைய அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறு அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் எண்ணம் இருந்தால், அவர்கள் எந்த நேரத்திலும் அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்லும் பட்சத்தில் , வலுக்கட்டாயப்படுத்தி அவர்களை தடுத்து வைக்க எங்களுக்கு எந்த ஒரு தேவையும் இல்லை என்றும் யார் சென்றாலும் அரசாங்கம் கவிழாது என்றும் அவர் கூறினார்.
சிறு கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் என்று எதிர்க் கட்சிகள் கனவு காண்கின்றனர் என்றும் எதிர்க்கட்சிகளில் சிலர் எப்போதும் அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பற்றி அவ நம்பிக்கை கொண்டுள் ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
உலகச் சந்தையில் தற்போதைய சூழ்நிலை காரணமாக பல நாடுகளில் வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ள நிலையில், கடுமையாகப் பாதிக்கும் இந்தச் சூழ்நிலையை நாமும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் மகிந்த கூறினார்.
மேலும் இவ்வாறான சூழ்நிலையில் எதிர்க்கட்சி ஆளும் கட்சி அரசாங் கத்தில் இருந்திருந்தால் இலங்கையின் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்றும் பிரதமர் மகிந்தராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.