இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போரின்போது முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையிலான போர் உக்கிரமடைந்து கொண்டிருந்த இறுதிக்கட்ட போரின்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களை இலங்கை இராணுவம் முற்றுகையிட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் முளள்ளிவாய்க்கால் நினைவு தினமானது அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்ள்ஸ் நிர்மலநாதன், சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன், கலையரசன், சுமந்திரன், சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோரால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.