சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை அதிகாலையே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து பொலிசார் கூறியதாவது, பாதிக்கப்பட்ட சாந்தி (46) கோயம்பேடு சந்தையில் குப்பை அள்ளுபவர் நடைபாதையில் வசித்து வருகிறார், இக்கொடூர செயலில் ஈடுபட்டவர் மணி (48) வடபழனியில் கூலி வேலை செய்து வருகிறார்.
சில மாதங்களாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர், சாந்தி கோயம்பேடு சந்தையில் வேலை செய்யும் மற்றொரு நபருடன் பழகி வந்தால் மணி கோபமடைந்துள்ளார்.
சம்பவத்தன்று நள்ளிரவு 1.30 மணிக்கு சாந்தி தூங்கிக்கொண்டிருந்த நடைபாதைக்கு அருகே வந்த மணி, பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்துள்ளார்.
பயணிகள் மற்றும் கடைக்காரர்கள் தீயை அணைத்து காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், பாதிக்கப்பட்ட சாந்தியையும் மணியையும் ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து நிலையில் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.