நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார். ஜல்லிக்கட்டு விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படவுள்ளது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. படக்காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் நடிகர் சூர்யா ஒரு மாதம் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கி பயிற்சி எடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில்
No Comments1 Min Read

