நடிகர் சித்தார்த்தை கைது செய்யக்கோரி தமிழக பாஜக சார்பில் பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் இல்லை என பொய் கூறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்.
இந்த செய்தியை ட்விட்டரில் பதிவிட்டு நடிகர் சித்தார்த், பதில் கருத்து கூறியிருந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை மிரட்டும் தொனியில் பேசி, தீவிரவாத செயலை தூண்டியதாக சித்தார்த் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் அவரை கைது செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இதனிடையே, தன்னுடையே செல்போன் எண்ணை பா.ஜ.க.வினர் சமூக வலைதளத்தில் பரப்பிவிட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக சித்தார்த் புகார் அளித்துள்ளார்.