விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருப்பவர் விஜே ரக்ஷன். இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தொகுப்பாளராக மட்டுமின்றி திரையுலகில் நடிகராக கால்பதித்துவிட்டார். கடந்த 2020ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துணை நாயகனாக நடித்து அசத்தியிருந்தார்.
இதை தொடர்ந்து அடுத்ததாக புதிய படம் ஒன்றில் கதாநாயகனாகவும் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது.
ரக்ஷன் தனக்கு திருமணமானதை கூட விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2வில் தான் கூறினார். மேலும் ரக்ஷனுக்கு குழந்தையும் இருக்கிறது.
இந்நிலையில், தொகுப்பாளர் ரக்ஷன் தன்னுடைய மனைவியுடன் எடுத்துக்கொண்ட அழகிய ஜோடியின் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.