தலவாக்கலை சென் கூம்பஸ் தோட்டத்திலும் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்திலும் 47 கொரோனா தொற்ற ளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக லிந்துல சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
அதோடு தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களில் 75 பேரில் 47 தொழிலாளர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதாக லிந்துல சுகாதார மருத்துவ அதிகாரி ஜனத் அபேகுணரத்ன கூறினார்.
இதனையடுத்து கொவிட் பாதிக்கப்பட்ட நான்கு தொழிலாளர்களை அடையாளம் கண்ட பின் அவர்களுடன் தொடர்பிலிருந்தோர் பிசிஆர் சோதனைக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் தொற்றுக்குள்ளானோரை சிகிச்சை நிலையங்களுக்கும் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.