கொழும்பு துறைமுக நகரத்துடனான சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர்ந்து இலங்கை தனது இருதரப்பு ஒத்துழைப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது.
கடல்சார் பாதுகாப்பை உள்ளடக்கிய பகிரப்பட்ட பரஸ்பர இருதரப்பு சிறப்பு ஒத்துழைப்பை நினைவில் கொள்ள வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
டெல்லியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர்அரிந்தம் பக்ஷி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்தியாவின் பாதுகாப்பை கருதி துறைமுக நகரின் நகர்வுகள் குறித்து அவதானித்து வருகின்றோம்.
குறிப்பாக துறைமுக நகர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகுமா என்ற கோணத்தில் அவதானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.