யாழ். உரும்பிராய் மேற்கு விளாத்தியடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மணியம் குணசேகரன் அவர்கள் 18-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மணியம்(குண்டுமணி) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், முருகையா கெங்காதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குலநாயகி(வவா) அவர்களின் அன்புக் கணவரும்,
வினிசன், அபிசன், விகாசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அறிவளகி, றாணிமலர், ஞானசேகரன்(சுவிஸ்), குகதாசன்(பிரான்ஸ்), செல்வமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குலவாணி, துர்க்காதரன்(லண்டன்), குமுதினி(லண்டன்), நிலானி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.