யாழ். தெல்லிப்பளை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் அல்பர்ட் தேவராஜன் அவர்கள் 11-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பீற்றர் செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும், வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான துரைரத்தினம் சாவித்திரிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கங்காநிதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சிந்துஜா, லக்ஷா, றொஷான் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
சுதர்சன், பிரகாஷ், ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷைலி, சகீல், பெலா, ஷேன், இமாரா, சிவின் ஆகியோரின் ஆசைப் பேரனும்,
தேவநேசன், தயாவதி(இலங்கை), தேவதாசன்(இலங்கை), தேவசுந்தர், அருள்ராஜ், காலஞ்சென்ற தேவசுரேந்திரன், சுகந்தி, சந்திரராஜ் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
மேரி தேவநேசன், நவீனி தேவசுந்தர், சசிலாதேவி அருள்ராஜ், சுகுணசந்திரன், கதாநிதி சந்திரராஜ், கலாநிதி நாதன், கருணாநிதி இராஜரட்ணம், கற்பகநிதி இராஜகோபால், ராகவன்(Hopper Hut) சிறீலஷ்மி, கஜநிதி சத்தியமூர்த்தி, காஞ்சனாநிதி கிருபாகரன், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை(இலங்கை), ஞானமணி(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.