யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் தம்பிராசா அவர்கள் 19-07-2023 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், இராமநாதன் துரை, நல்லம்மா, தங்கம்மா, பரமலிங்கம், சுப்பிரமணியம் மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியபாலன்(கனடா), சாந்தினி(சுவிஸ்), லிங்கேஸ்வரன்(கனடா), இராஜேஸ்வரி(கனடா), துளசிதாசன்(கனடா), தர்சினி(திருகோணமலை, முன்னாள் ஆசிரியை- புளியங்குளம்), குகதாசன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இந்திராகாந்தி, நல்லையா, அனுஷா, காலஞ்சென்ற உருத்திரநாதன், கார்த்திகா, யோகன், சித்திரா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
மிதுலன், ஸ்ரீகணன், தர்வீன், அஸ்விகா, அஸ்மிகா, யதுசாயின், உருத்சாயிகா, அபிராம், திவ்யன், பிரஜித், டெய்சாயினி, டிலுக்சிகா, தரணியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.