யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரம், மலேசியா, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை சத்தியபால் அவர்கள் 02-09-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை (வர்த்தகர்) சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தனிநாயகம்(ஆசிரியர்) கமலரெட்ணம்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயமாலா அவர்களின் ஆருயிர் கணவரும்,
காலஞ்சென்ற சுனித்திரா மற்றும் சுஜாத்தா, அகிலன், நிசாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராதிகா அவர்களின் அன்பு மாமனாரும்,
சந்திரபாலன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
இரத்தினதேவி அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
அருள்நேசன், புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாரங்கி, பிரணவி, ஆத்மி, டிலன், ரஞ்சித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.