யாழ். கரவெட்டி கிழக்கு செங்குந்தர்வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோகனகதேவி கந்தசாமி அவர்கள் 08-09-2023 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், கொடிகாமம் வேதவனம் பொன்னம்பலம் பார்வதி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற கார்த்திகேசு, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், சண்முகலிங்கம் மற்றும் சரோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கோகனகாந்(பாரிஸ்), சிறிகாந்(இங்கிலாந்து), மோகனகாந்(கனடா), கிருஸ்ணவேணி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமேஸ்வரி(பாரிஸ்), செல்வரதி(இங்கிலாந்து), காவேரி(கனடா), தில்லைநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புஸ்பமணி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அரவிந்தன், பிரபாகரன், பொன்சுரேஸ், பொன்சுதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வித்தியா, விதுசன், சியாமளா, ரோகித், சுவீகா, கிசன், அக்சத், பிரணவி, திவியன், அனுஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.