பிரித்தானியா Ickenham ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட லக்ஷ்னா ஞானசேகரம் அவர்கள் 02-08-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஞானசேகரம் மஞ்சுளா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அல்வின் ஆயிசன் அவர்களின் பாசமிகு அக்காவும்,
காலஞ்சென்றவர்களான திருஞானசுந்தரம் செல்லம்மா தம்பதிகள், காலஞ்சென்ற ஐயாத்துரை, தனலக்ஷ்சுமி தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,
குணசேகரம் தாரணி, சந்திரசேகரம் சிவகுமாரி, ஸ்ரீஸ்கந்தன் றஞ்சனா தம்பதிகளின் பாசமிகு பெறாமகளும்,
இராஜரூபன் றஞ்சினி, சேகர் ராகினி, பாலேந்திரன், காலஞ்சென்ற மாலினி, இந்திரகுமார் சாந்தினி, றஞ்சன் பாமினி, றமணன் பத்மினி ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.