யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், கைதடி, பன்னாலை, கொழும்பு மற்றும் Markham கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி சின்னதம்பி அவர்கள் 27-07-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி (புலவர் உடையார்) முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வைரமுத்து சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செகதீஸ்வரிஅம்மாள் (ஓய்வுபெற்ற ஆசிரியை- மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பளை) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. சுபாதினி (கனடா) அவர்களின் அன்புத் தந்தையும்,
Dr. செந்தில்மோகன் அவர்களின் அன்பு மாமனாரும்,
Dr. சிந்து, மாதரி, நீலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பவளம்மா, சிவக்கொழுந்து, இராமலிங்கம், பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்லப்பா, செல்லம்மா மற்றும் பாலசுப்பிரமணியம், கனகசபாபதி, அகிலாண்டநாயகி, இராசேஸ்வரி, கமலாம்பிகை, காலஞ்சென்ற இலக்மனேஸ்வரன், யோகேஸ்வரன், லோகநாயகி, விக்கினேஸ்வரன்(இங்கிலாந்து), விக்கினேஸ்வரி, கார்த்திகேயன்(நோர்வே), காலஞ்சென்ற பரமேஸ்வரி, ஏரம்பமூர்த்தி, கதிர்காமதம்பி, அருள்சோதி, சகுந்தலா, சிவனேசன், உமா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.