இரண்டு ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய காணிகளை உடையவர்களுக்கு துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட உள்ளது.
விவசாயிகளின் நலனைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதற்கு முன்னரும் விவசாயிகளுக்குத் துப்பாக்கி வழங்குவது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கிடைத்த போதிலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான சுற்று நிருபம் வெளியிடப்பட்ட போதிலும், அதற்கான நடைமுறைகள் அமுல்படுத்தப்படவில்லை.
துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
சுற்று நிருபம் குறித்த தகவல்களை அரசாங்க அதிபர்களுக்கும் அனுப்பி வைக்குமாறு அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.