எதையும் ஒழுங்கா விசாரிக்காமல் ஒருவர் மீது சந்தேகப்படக்கூடாது. எங்க வீட்டில் நிறைய தடவை அனுபவப்பட்டிருக்கேன். என்ன சொல்ல வரேன்னு கேட்காமலே அவங்களா ஒன்றை மனதில் நினைத்துக்கொண்டு திட்டி தீர்ப்பாங்க. அவங்க கோவம் தணிந்த பிறகு உண்மை என்னன்னு சொன்னா, அப்பறம் ஒரு பேச்சும் வராது. அதற்கு முதலிலே நாம் சொல்வதை காது கொடுத்து கேட்டிருக்கலாம் அல்லவா? அப்படி என்ன வைராக்கியம் அவங்களுக்கு? பெற்றோர்களின் இந்த மாதரியான குணம், நிறைய பிள்ளைகள் தவறான முடிவு எடுக்க காரணமாகிறது.
முதலில் நானே சந்தேகப்பட்டு, உனக்கு கல்யாணம் நடந்தாச்சா? வீட்டில் குழந்தை இருக்கிறதா? எனக்கேட்டேன். அப்படி எதுவுமே நடக்கவில்லை. ஏன் எனக்கு இப்படி ஆகுதுன்னே தெரியல என்றாள். கூடப்படிக்கும் எனக்கே விவரம் அறியாமல் கேட்ட உடனே சந்தேகம் வருகிறது. தனக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்குன்னு வீட்டில் சொன்னா, சும்மா இருப்பாங்களா? அதற்கு பயந்தே யாரிடமும் கூறாமல், பயந்து பயந்தே பல நாட்களை கடத்தியிருக்கிறாள். பிறகு எனக்கு தெரிந்த இன்னொரு தோழியின் அம்மா மருத்துவர் என்பதால் அவரிடம் அழைத்துச்சென்றோம்.
திருமணம் ஆகாமல், குழந்தை பிறக்காமல் மார்பகத்தில் பால் சுரக்க காரணம், தைராய்டு ஹார்மோன் கோளாறு தானாம். ப்ரோலேக்ட்டின் எனும் ஹார்மோன் அதிகரித்தால் பால் சுரக்க உடம்பு தயாராகும். இது பெண்களுக்கு மாத விலக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். பொதுவாக உடம்பில் உள்ள ஹார்மோன்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தைராய்டுக்கும் இதுக்கும் தொடர்பு உண்டு. மருத்துவரிடம் சென்றால் ரத்த பரிசோதனை மூலம் ஆராயப்படுகிறது. பாஸ்ட்புட், ஜங்க் புட் உணவுகளை தவிர்த்து, சீரான உடற்பயிற்சி செய்வதின் மூலம் மற்றும் மருந்துகளின் மூலம் இது சரி செய்ய படும்.