திருகோணமலை- குச்சவெளி, கல்லராவ கடற்கரையில் இறந்த நிலையில் அரிய வகை சுறா மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
கல்லறாவ மீன்பிடி கிராமத்திலுள்ளவர்கள், கரை வலை மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும்போது, இவ்வகை மீனானது பல தடவைகள் அவர்களது வலையில் சிக்கியுள்ளது.
எனினும் அவர்கள், அந்த சுறா மீனை பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் பலமுறை அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் குறித்த மீனானது இறந்த நிலையில் இன்று கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வருகைதந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை இந்த சுறா மீனானது சுமார் 9000 கிலோ எடையும் 9 மீற்றர் நீளமும் கொண்டது எனவும் 70-100 வருடங்கள் வாழும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.