வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (04) கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரியவின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
விசாரணை முதலில் திறந்த நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் இறந்தவர் தரப்பின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது உத்தியோகபூர்வ அறையில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதாக நீதவான் குறிப்பிட்டார்.
அதன்படி, நீதவானின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதன்போது, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
உயிரிழந்த தினேஷ் ஷாஃப்டரின் மனைவி மற்றும் மற்றொரு நிர்வாக அதிகாரியிடம் இருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாட்சிய விசாரணை வரும் 10ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தலைமையிலான சட்டத்தரணிகள் குழு தினேஷ் ஷாப்டரின் குடும்பத்தின் உரிமைகளுக்காக ஆஜராகியிருந்தது.