திண்ம கழிவு மின் உற்பத்தி: முதல் மின் உற்பத்தி நிலையம்
இலங்கையில் நிறுவப்பட்டுள்ள திண்ம கழிவுகளைப் பயன்படுத்தி மின் சாரத்தை உற்பத்தி செய்யும் முதல் மின் உற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வினால் இம்மாதம் 17 ஆம் திகதி ஹெந்தல கெரவலப்பிட்டிய பகுதியில் ஆரம்பிக்கப்பட்வுள்ளது என்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
மின் உற்பத்தி நிலையத்தில் தினமும் 700 டொன் கழிவுகளைப் பயன்படுத்தி 10 மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிகளிலிருந்து கழிவுகளை சேகரித்து மின் உற்பத்தி செய்யப்படும்.
சேகரிக்கப்பட்ட கழிவுகளை கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரத்தை முழு மாவட்டத்திலும் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு முக்கியமானது என்று அமைச்சர் கூறினார்.
மேலும்இ கூடுதலாக உக்கி போகும் கழிவுகளைப் பயன்படுத்தி மாத்தறை மாவட்டத்தை மையமாக கொண்டு முதல் உயிர்வாயு மின் உற்பத்தி திட்டத்தை தொடங்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தின் கொடவில பகுதியில் கட்டப்பட்டு வரும் இந்த திட்டத்தில்இ தினமும் 40 டொன் கழிவுகளைப் பயன்படுத்தி தேசிய அளவில் 400 கிலோவாட் மின்சாரத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் செயற்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.