நாட்டில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் சிங்கள இன முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிப்பதாக எம்.பி அத்துரலிய ரத்ன தேரர் Athuraliye Rathana Thero தெரிவித்தார்.
அதேவேளை, 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளில் மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளோம் என அத்துரலிய ரத்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (03-08-2023) பொரளையில் உள்ள இலங்கை கம்யூனிசக் கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.