பிரதமர் மகிந்த ராஜபக்ச திருப்பதிக்கு பயணம் மேற்கொண்ட தனியார் விமானம் குறித்த தகவல் பெரும் ம்சர்ச்சையை தோற்றுவித்திருந்த நிலையில் அந்த விமான யாருடையது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி குறித்த விமானம், மகிந்த ராஜபக்க்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் உகண்டாவுக்கான தூதுவராக கடமையாற்றிய வேலுப்பிள்ளை கணநாதனுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. அத்துடன் வேலுப்பிள்ளை கணநாதன் தற்போது கென்யாவுக்கான தூதுவராக கடமையாற்றி வருகின்றார்.
அதேவேளை ராஜபக்ச குடும்பத்தின் மிக நெருங்கிய நண்பராக கருதப்படும் வேலுப்பிள்ளை கணநாதன் , எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பலரின் நெருங்கிய கூட்டாளி எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை பிரதமர் மகிந்த பயணம் செய்த அந்த விமானம் இத்தாலியின் சென் மெரினோ என்ற பகுதியில் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் , குறித்த விமானம் கடந்த 23ம் திகதி உகாண்டாவில் இருந்து இரத்மாலான விமான நிலையத்திற்கு வந்ததாகவும் முன்னிலை சோலிஷ கட்சியின் தேசிய அமைப்பாளர் புபுது ஜாகொட தெரிவித்திருந்தார்.
அதோடு சென் மெரினோ என்ற இடம் சட்ட விரோதமாக ஈட்டப்படும் கருப்பு பணத்தை சட்டபூர்மாக மாற்ற பயன்படுத்தப்படும் ஒரு இடமாக கருதப்படுகின்ற நிலையில், மகிந்த பயணம் செய்த விமானம் கருப்பு பணம் சம்பந்தப்பட்ட ஒருவரின் விமானமாக இருக்கலாம் எனவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது .