தமிழக ஏதிலிகள் முகாமில் இருந்து இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக – மண்டபத்தில் இருந்து 29 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் பெண் கடந்த ஜுலை மாதம் 27ம் திகதி முதல் காணவில்லை என முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் மண்டபம் ஏதிலிகள் முகாமில் உள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் மண்டபம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது கணவர் குறித்த முறைப்பாட்டைச் செய்துள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.