தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் இந்த வாரம் முழுவதும் சிறப்பு விருந்தினர் வந்து வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி வருகை தந்திருந்தனர்.
பிக்பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் சிறப்பான கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர்.
முன்னதாக, பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினர் வருகிறார்கள் என போட்டியாளர்கள் குதூகலாமாகி இருந்த நிலையில், அவர்கள் வந்து பலரின் எதிர்மறை மற்றும் நேர்மறை என அனைத்து விடயங்களையும் கூறியதால், ஏன் அவர்கள் வருகை தந்தார்கள் என்பது போல போட்டியாளர்கள் கதி கலங்கியும் போயிருந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில் இரண்டாவது நாளில் நேற்று, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்துள்ளனர்.
இவர்களும் போட்டியாளர்களிடம் பல்வேறு கேள்விகளையும் எழுப்பி, முந்தைய நாட்களில் விளையாடிய விதம் குறித்தும் நிறைய கேட்டிருந்தனர்.
இந்த நிலையில், அவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன் போட்டியாளர்கள் அனைவரும் செய்த விடயம் ஒன்று பெரிய அளவில் பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தருவதற்கு முன்பாக வெளியே நின்றபடி பார்வதி மற்றும் ஷோபனா ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், “என்ன ரெடியா?” என போட்டியார்களிடம் கேட்கின்றனர்.
ஆனால் போட்டியாளர்களோ ரெடி இல்லை என்பது போல கூறிக்கொண்டு நேராக கதவருகே சென்று அதை பிடித்து அவர்களை உள்ளே வர முடியாமல் செய்தது போலவும் செய்து சைகை காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அனைத்து போட்டியார்களுமே கதவருகே சென்று நின்று கதவை திறக்க முடியாதபடி செய்து ஜாலியாக கத்தியபடியும் இருக்கின்றனர்.
முன்னதாக சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் அகமது மீரான் ஆகியோர் வந்திருந்து பல கருத்துக்களை கூறியிருந்தது போட்டியாளர்களை அதிகம் கதிகலங்க வைத்திருந்தது.
அப்படி ஒரு சூழலில் தான் புதிதாக இனி யாரும் சிறப்பு விருந்தினர் என வர வேண்டாம் என்பது போல அனைத்து போட்டியாளர்களும் முதல் முறையாக ஒற்றுமையாக இருந்து ஜாலியாக செய்த இந்த விடயம் பெரிய அளவில் பிக்பாஸ் பார்வையாளர்களை இன்ப அதிர்ச்சியில் வைத்துள்ளது.