பெரும்பாலான மக்கள் உடல் நிலை சரியில்லை என்றால், தண்ணீருடன் தான் மருந்து சாப்பிடும் வழக்கம் உள்ளது.ஆனால், சிலருக்கு டீ அல்லது பழசாறுடன் மருந்து சாப்பிடும் பழக்கம் உள்ளது. அப்படி உங்களுக்கு இந்த பழக்கம் இருந்தால் இந்த பதிவை தொடர்ந்து படிக்கவும்.
சிட்ரஸ் பழங்களுடன் மருந்துகளை உட்கொள்வது ஆபத்தானது என்பது இந்திய மருத்துவ சங்கத்தின் ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், இன்றே அந்த பழக்கத்தை விட்டு விடவும்.தேநீர் அதாவது டீயுடன் ஏன் மருந்துகளை எடுக்கக்கூடாது. தேநீரில் டானின் (Tannin) உள்ளது. இது மருந்துடன் சேர்ந்து ஒரு இரசாயன எதிர்வினை செய்கிறது.
மேலும், மருந்துகளை, தேநீர் மற்றும் காபியுடன் மருந்து உட்கொள்வதன் மூலம் அதன் செயல் திறனும் குறையும் . சில நேரங்களில், மருந்தின் செயல் திறன் முற்றிலுமாக அழிந்து விடலாம்.
பழச்சாறுடன் மருந்தை உட்கொள்வதால் மருந்தின் செயல்திறன் குறைகிறது. சிட்ரஸ் பழச்சாறுகள் மருந்தின் செயல்திறனை குறைக்கின்றன.இதனுடன், நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் (Anti-biotic)செயல்திறனும் குறைகிறது. பழசாறு மருந்தை கிரகித்துக் கொள்ளும் திறனைக் குறைக்கிறது.அதோடு, ஜூஸ் அல்லது டீயுடன் மருந்தை எடுத்துக் கொள்ளும் போது சில அரிதான நேரங்களில், அதன் எதிர் வினை காரணமாக உயிருகே ஆபத்தும் ஏற்படலாம். எனவே இதை தவிர்ப்பது சிறந்தது.