18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திகதியை பிற்போட அரசு தீர்மானித்துள்ளது. மே 15 ஆம் திகதி (நேற்று) முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படும் என அரசு முன்னதாக அறிவித்திருந்தது. ஆனால் நேற்றைய தினம் அவர்களுக்கான தடுப்பூசிகள் போடும் பணி ஆரம்பிக்கப்படவில்லை.
முன்னதாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளவர்களின் உடல்நலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பொறுத்தே இந்த திகதி தீர்மானிக்கப்படும்! சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமையோடு பிரான்சில் 20 மில்லியன் பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியேனும் போட்டுக்கொண்டுள்ளனர் என தெரிவித்திருந்தார். ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்குள் 30 மில்லியன் பேராக உயர்த திட்டமிடப்படுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.