மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலை வழக்கில் இருந்து அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் ஏ.லக்ஷ்மன் குரே மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் செல்வராஜா பிரிபாஹகரன் (மோரிஸ்) ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.
கம்பஹா நீதிமன்றம்
இந்த வழக்கு கம்பஹா இலக்கம் 01 உயர் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.