பொவுவாகவே தொப்பையில்லாத மெலிந்த உடல் அமைப்பை யார்தான் விரும்ப மாட்டார்கள்? ஆனால் இதற்காக உடற்பயிற்சிக் கூடங்களில் பலமணி நேரம் வியர்வை சிந்தி உடற்பயிற்சி செய்யவேண்டி இருக்கிறதே, அதுதான் பெரும்பாலானவர்களுக்கு பெரும் பிரச்சினையாகவுள்ளது.
ஆயினும் தொப்பையிலுள்ள கொழுப்பை அவ்வளவு எளிதாக கரைக்க முடிவதில்லை. வாக்கிங், ஜாகிங், சிட்அப்ஸ் இப்படி ஓயாமல் தினந்தோறும் உடற்பயிற்சிகளை செய்தாலும், இடுப்பு மற்றும் வயிற்றுசதையின் சிறுபகுதியை குறைக்கவே மாதக்கணக்கில் ஆகிவிடுகிறது.
இந்நிலையில், ‘இந்த உடற்பயிற்சி 10 நாட்களில் உங்களின் தொப்பையை குறைக்கும்’ என யாராவது சொன்னால் அதை நாம் நம்பமுடிகிறதா? ஆனால் இது சாத்தியம் என்கின்றனர் ஜப்பானிய உடற்பயிற்சி நிபுணர்கள்.
ஒரு கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெறுவதற்காக, ஜப்பானின் புகழ்பெற்ற பாத அழுத்த சிகிச்சை மற்றும் மசாஜ் நிபுணரான மருத்துவர் தோஷிகி ஃபுகுட்சுட்ஸியால், பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த ‘டவல்’ உடற்பயிற்சி கண்டுபிடிக்கப்பட்டது.
இவர் இந்த உடற்பயிற்சியினால் தொப்பையை குறைக்க முடியும் என உறுதியாக கூறியுள்ளார். மேலும் சரியான உடலமைப்பு, பலம் வாய்ந்த முதுகுத்தண்டு, நாட்பட்ட முதுகுவலியிலிருந்து நிவாரணம் போன்றவற்றையும், இந்த உடற்பயிற்சியினால் கூடுதலாக பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர்களைப் பொறுத்தவரை, வயிற்றைச் சுற்றியுள்ள கூடுதல் சதையை இந்த உடற்பயிற்சி குறைக்க உதவும். அது பொதுவாக இடுப்புப் பகுதியில் படிந்திருக்கும். ஒருவர் இந்த உடற்பயிற்சியை இடைவிடாது செய்வதினால், அவரது இடுப்புப்பகுதியில் படிந்துள்ள கொழுப்பு கரைக்கப்பட்டு தொப்பையை விரைவில் குறைகிறது.
முதலில் இந்த உடற்பயிற்சியினை செய்வதற்கு ‘டவல்’ எனப்படும் துண்டும், ஒரு யோகா மேட்டும் வேண்டும். பிறகு இந்த உடற்பயிற்சியினை கீழே வருவது போல படிப்படியாக செய்யவும்.
1.கீழே விரிக்கப்பட்ட யோகா மேட்டில், விட்டம் அல்லது வானத்தைப் பார்த்தவாறு படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கை மற்றும் கால்களை நன்றாக நீட்டி ரிலாக்ஸ் செய்யுங்கள். விளம்பரம் படி
2.அடுத்து உங்களின் கீழ் முதுகுக்கு அடியில், தொப்புளுக்கு நேர் கீழானப் பகுதியில், ஒரு நடுத்தர அளவிலான ‘டவல்’ எனப்படும் துண்டை நன்றாக சுருட்டி வையுங்கள்.
3.உங்களின் தோள்பட்டை பூமியில் நன்றாகப் படுமாறு வைத்து, கால்கள் இரண்டையும் 10 செண்டிமீட்டர் இடைவெளியில் நகர்த்தி வையுங்கள்.
4.இப்போது உங்களின் கைகளை தலைக்கு மேலே தூக்கி, உள்ளங்கைகளானது பூமியை பார்த்தவாறு இருக்குமாறு வையுங்கள்.
5.இந்த நிலையில் குறைந்தது 5 நிமிடங்களாவது இருங்கள். பிறகு மெதுவாக உடலைத் தளர்த்தி, இயல்பு நிலைக்கு திரும்புங்கள்.
இந்த உடற்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம் தொப்பையை இலகுவில் குறைப்பது மாத்திரமன்றி மீண்டும் தொப்பை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும். இத்துடன் உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டுமாயின் முறையாக உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.