அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குவதற்கான முயற்சிகளில் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்களிற்கான ஆலோசகர் ஆசுமாரசிங்க தெரிவித்துள்ளார் .
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்வருட ஆரம்பத்தில் இலங்கையின் கடன் 47 பில்லியன் டொலராக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
பொய் சொல்லவேண்டாம்
சில புள்ளிவிபரங்களை முன்வைத்துள்ள அவர் மத்திய வங்கி ஆளுநரை நாட்டின் கடன் நிலைமை தொடர்பில் பொய் சொல்லவேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேவேளை கடன் புள்ளிவிபரங்கள் குறித்து மத்திய வங்கி ஆளுநர் பொய்சொல்கின்றார் என என ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்களிற்கான ஆலோசகர் அசுமாரசிங்க தெரிவித்துள்ளார்