தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இடம்பெற்ற ஹெலோவீன் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அனுதாபத்தை அந்நாட்டு அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது