வேத ஜோதிடத்தில், நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய்.
இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். கிரகங்களில் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்.
இந்த செவ்வாய் தற்போது தனுசு குரு பகவானின் ராசியான தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் சனி பகவானின் ராசியான மகர ராசிக்கு எதிர்வரும் (05.02.2024) ஆம் திகதி நுழையவுள்ளார்.
செவ்வாய் மகர ராசியில் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
இந்த 4 ராசிக்காரங்களுக்கு நிறைய திறமையை கடவுள் கிஃப்ட்டா கொடுத்து இருக்கிறாராம்.
குறிப்பாக சில ராசிக்காரர்களின் ஆசையை செவ்வாய் நிறைவேற்றவுள்ளார்.
அதோடு நிதி நிலையில் நல்ல உயர்வையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவுள்ளார்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார்.
இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை வழங்குவார்.
நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
வியாபாரம் செய்து வருபவர்கள், இக்கால கட்டத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால், உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார்.
இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
தனிப்பட்ட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை அனுபவம் வாய்தவர்களின் உதவியுடன் தீர்வு காண்பீர்கள்.
பணியிடத்தில் உங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார்.
இதனால் இந்த ராசிக்காரர்கள் பல்வேறு துறைகளில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
எதிர்பாராத நிதி ஆதாயங்களை இக்காலகட்டத்தில் பெறக்கூடும்.
வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
நீண்ட நாட்களாக சந்தித்து வரும் பிரச்சனைகள் இந்த பெயர்ச்சிக்கு பின் முடிக்கு வரும். ரியல் எஸ்டேட்டில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்காத அளவில் நல்ல லாபம் கிடைக்கும்.