வேத ஜோதிடத்தின்படி, செவ்வாய் பகவான் ஒகஸ்ட் 26ம் திகதி ரிஷபத்தில் இருந்து மிதுன ராசிக்கு இடம்பெயரவுள்ளார்.
இதன்படி, செவ்வாய் பெயர்ச்சியால் சில ராசியினருக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். அந்த வகையிவ், பகை பெறும் ராசியால் அதிர்ஷ்ட லாபம் பெறப்போகும் ராசியினர் யார் என்பதனை பார்க்கலாம்.
மேஷம் : மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய் பகவான், மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் பகை பெற உள்ளார். இதனால் சந்தர்ப்பங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். வீரமும் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் காரியங்கள் அனைத்தும் பொன்னாக மாறும். நீங்கள் வணிக முயற்சிகளில் ஈடுப்பட்டு கொண்டிருப்பவர் என்றால் அதில் முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும்.
சிம்மம் : சிம்ம ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாயின் பெயர்ச்சி ஏற்படுக்கூடும். இதனால் எல்லா வேலைகளிலும் பணபலன் கிடைக்கும். வீட்டில் எடுக்கப்படும் பல முடிவுகள் சரியாக இருக்கும். புதிய பல வாய்ப்புகள் வீட்டைத் தேடி வரும். எந்த துறையில் இருந்தாலும் அதில் முன்னேற்றம் மட்டுமே கிடைக்கும். பண முதலீடுகள் மற்றும் வணிகத்தில் லாபத்தை எதிர்பார்க்கலாம்.
துலாம் : துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் பகை பெற்று சஞ்சரிக்கக்கூடிய நிலையில் உள்ளார். எனினும் இந்த பெயர்ச்சியால் பண லாபம் அதிகமாக கிடைக்கும். வீடு, மனை, நிலம் வாங்கும் முயற்சியில் இருப்பவர்கள் கூடிய விரைவில் அதனை பெறுகிறார்கள். வியாபாரம் தொடர்பில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். வேலை, வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.