முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி, எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வேண்டி வாருங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருளுவார் வேலவன். அஷ்ட திக்குகளுக்கும் தூப ஆராதனை செய்து வேண்டி வாருங்கள். நினைத்தது போலவே சொந்த வீடு அமைத்துக் கொடுப்பார்கள் அஷ்டதேவதைகளும், வாஸ்து பகவானும்….
நவக்கிரகங்களில், செவ்வாய் பகவான் பூமிகாரகன். செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான். அதனால்தான், செவ்வாய் பகவானையும் முருகக் கடவுளையும் வணங்கி வந்தால் வீடு பேறு நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
நவக்கிரகங்களில், செவ்வாய் பகவானுக்கு உரிய தலமாகப் போற்றப்படுகிறது வைத்தீஸ்வரன் கோவில். இந்தத் தலத்தில் அங்காரனுக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கிறது. அருகில் உள்ள சிவாலயங்களில் உள்ள நவக்கிரகங்களையும் சுற்றி வந்து வேண்டிக்கொள்ளலாம். அதேபோல், அங்கே முருகப்பெருமான் தனிச்சந்நிதியில் எழுந்தருளியிருப்பார். இவரை மனமுருகி வேண்டிக் கொண்டாலே சொந்த வீடு கனவு நனவாகும். வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
செவ்வாய் பூமிகாரகன் என்றால் சுக்கிரன் கட்டிடகாரகன். நவக்கிரகத்தில் ஒரு கிரகமாக, சுக்கிர பகவானும் இருக்கிறார். எனவே தொடர்ந்து நவக்கிரக வழிபாடு செய்து வருவது மிக மிக அவசியம்.
அப்படி இப்படின்னு பணத்தைப் புரட்டி, லோன் வாங்கி வீடு கட்ட ஆரம்பிச்சிட்டோம். ஆனா, கட்றோம் கட்றோம்… கட்டிக்கிட்டே இருக்கோம்’ என்று கலங்கிச் சொல்பவர்கள் உண்டு. இவர்களைப் போல் உள்ளவர்களும் ‘இன்னும் இடமே வாங்க முடியலீங்களே…’ என்று வருந்துபவர்களும் செவ்வாய் பகவானையும் முருகப் பெருமானையும் உரிய மலர்கள் சார்த்தி, தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்தால், மனை வாங்கும் யோகம் கிடைக்கப் பெறலாம். சொந்த வீடு என்பது அமைத்தே தீருவார் முருகப் பெருமான்.
அதேபோல், இப்போது குடியிருக்கும் வீட்டில், அது வாடகை வீடாக இருந்தாலும் வாஸ்துப்படி சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து, வாஸ்து பகவானை ஆராதனை செய்ய வேண்டும் அஷ்ட திக்குகள் என்று சொல்லக் கூடிய வீட்டுக்குள் இருக்கிற எட்டுத்திசைகளுக்கும் சாம்பிராணி முதலான தீபதூப ஆராதனைகளைச் செய்து வாருங்கள்.
முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி, எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வேண்டி வாருங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருளுவார் வேலவன். அஷ்ட திக்குகளுக்கும் தூப ஆராதனை செய்து வேண்டி வாருங்கள். நினைத்தது போலவே சொந்த வீடு அமைத்துக் கொடுப்பார்கள் அஷ்டதேவதைகளும், வாஸ்து பகவானும்..