மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் தணிகவேல் செய்த சிறிய தவறால் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் மனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்டன.
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக தணிகவேல் களம் கண்டார்.அவரின் வேட்பு மனு இன்று அதிரடியாக நிராகரிக்கப்பட்டது.அவர் செய்த சிறிய தவறு காரணமாகவே வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது தனது கட்சியின் பெயரை வேட்புமனுவில் எழுத மறந்ததால் வேட்பு மனு நிராகரிப்பு என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை அறிந்த தணிகவேல் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.