சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் பல இடங்களில் கறுப்பு நிறத்துடன் தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் இதை கடக்க பெரிதும் சிரமப்பட்டனர். வாகன போக்குவரத்தும் பல இடங்களில் ஸ்தம்பித்தது. தொடர்ந்து மழைபெய்த வண்ணம் இருந்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சென்னை நகரமே இன்று காலை ஸ்தம்பித்தது.
இதை அறிந்த முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். முதலில் அவர் எழும்பூர் பகுதியில் தேங்கிய மழைநீரை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து வடசென்னை பகுதிகளையும் பார்வையிட்டார்.
புரசைவாக்கம், டவுட்டன், கே.என்.கார்டன், பட்டாளம்எ நியூபேலஸ் ரோடு, ஓட்டேரி நல்லாங்கால்வாய், அயனாவரம் நெடுஞ்சாலை, பாடி மேம்பாலம், சத்யாநகர்எ கொளத்தூர் பாபா நகர், ஜி.கே.எம்.காலனி, ஜவகர் நகர்எ பெரம்பூர் பேப்பர் மில் வீதி உள்ளிட்ட பகுதிகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.
மாநகராட்சி ஊழியர்கள் வெள்ளத்தை அப்புறப்படுத்தும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நடந்து சென்றும் பார்வையிட்டார். நிவாரண முகாம்களையும் ஆய்வு செய்தார்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
No Comments1 Min Read

