ஜோதிட சாஸ்திரத்தில் கிரகப்பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் பல பலன்களை கொடுக்கின்றது. அந்த வகையில் பல கிரகங்கள் பல தாற்றங்களை கொண்டு வரும்.
இம்முறை நடைபெறப்போகும் கிரக மாற்றம் சுக்கிரன்-சந்திரன் உருவாக்கிய கலாத்மக ராஜயோகமாகும். இது ஜனவரி 28, 2025 அன்று, சுக்கிரன் அதன் உச்ச ராசியான மீனத்தில் பயணிக்கிறார்.
மேலும், பிப்ரவரி 01, 2025 அன்று, சந்திரனும் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மாறுகிறார். இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றாக இணைவது இணைப்பு அனைத்து ராசிகளின் பலன்களும் மாறும்.
மீன ராசியில் சுக்கிரனும் சந்திரனும் இணையும் இந்த யோகத்தால் எந்த ராசிகளுக்கு நற்பலன் என்பத இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம் |
- மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் சந்திரனின் கலாத்மக ராஜயோகம் நல்ல பலன்களை கொடுக்கும்.
- மற்றவர்களை விட நீங்கள் ஆளுமை திறன் அதிகமாக காணப்படுவீர்கள்.
- வாழ்க்கை துணையுடன் சேர்ந்து பல வேலைகளை செய்து முடிக்க வாய்ப்பு அதிகம்.
- வணிக வேலைகள் இருந்தால் அது பல லாபத்தை கொட்டப்போகிறது.
|
விருட்சிகம் |
- விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன்-சந்திரன் சேர்க்கை நல்ல பலன்களைக் கொடுக்கப்படுகிறது.
- உங்களுக்கு ஐந்தாவது வீட்டில் இந்த இணைப்பு உருவாகிறது இதனால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- எந்த வகையிலும் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் லாபத்தை கொத்தாக அள்ளப்போகின்றனர்.
- எங்காவது இருந்து திடீர் பண ஆதாயங்கள் கிடைக்கும்.
|
கடகம் |
- கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் சந்திரனின் சேர்க்கை வாழ்க்கையில் நல்ல விஷயங்களை கொண்டு வரும்.
- பணி இடத்தில் நல்ல பெயர் கிடைப்பதால் உங்களின் பல நாள் கனவை முடித்து வைக்கலாம்.
- புதிய பொறுப்புக்களை பொறுப்பேற்க நேரிடும்.
- நீங்கள் எந்த துறையில் சாதிக்க நினைத்தாலும் அது வெற்றியில் தான் முடியும்.
- எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கின்றதோ அதை சரிவர பயன்படுத்துவீர்கள்.
|
Post Views: 3