சுக்கிரன் தற்போது உத்திரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்து பயணித்து வரும் நிலையில் வருகிற செப்டம்பர் 2 ஆம் திகதி ஹஸ்த நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். ஹஸ்த நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன் ஆவார்.
சுக்கிரன் ஹஸ்த நட்சத்திரத்தில் மாறப் போவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக அமையும், மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும்.
இந்நிலையில் செப்டம்பர் 2ஆம் திகதி அதிகாலை 05.20 மணிக்கு ஹஸ்த நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி அடைந்து செப்டம்பர் 13ஆம் திகதி வரை இந்த ராசியில் இருப்பார். ஹஸ்த நட்சத்திரம் 27 நட்சத்திரத்தில் 13வது நட்சத்திரமாகும்.
அதன் பின்னர் செப்டம்பர் 13 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார்.
சிம்மம்
சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக பலனைத் தரப் போகிறது. இந்த காலகட்டத்தில், சிம்ம ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு இருக்கும். பண வரவு அதிகரித்து சேமிப்பும் அதிகரிக்கும். இதனால் வெற்றி அடைவீர்கள். இந்த காலம் வியாபாரிகளுக்கு லாபகரமாக இருக்கும். அதனுடன் சிம்ம ராசிக்காரர்களுக்கு சில நல்ல செய்திகளையும் பெறலாம்.
கன்னி
சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் பலன் தரப் போகிறது. இந்த காலகட்டத்தில் வேலையில் வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். அனைத்து பெரிய பிரச்சனைகளில் இருந்து வெற்றி பெறலாம். உத்தியோகத்தில் நல்ல செயல்திறன் பெற்று மூத்தவர்களின் பாராட்டுகளைப் பெறலாம். பொருளாதார ரீதியாக சிறப்பாக செயல்படுவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் மிகவும் சுபமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் பெருகும். உங்களுக்கு வேலையில் பதவி உயர்வு அல்லது வருமானம் அதிகரிக்கும். திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.