இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜி செங்கொன், மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இடையில் சந்திப்பொறு இடம்பெற்றது.
சீன ஜனாதிபதிக்கு கடிதம்
நல்லெண்ண அடிப்படையில் கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது மீண்டும் சீன ஜனாதிபதியாகப் பதவி ஏற்கும் ஷி ஜின்பிங்கிற்கான வாழ்த்து மடல் ஒன்றை மஹிந்த ராஜபக்ச சீனத் தூதுவரிடம் கையளித்தார்.
இந்தச் சந்திப்பின் போது சீன – இலங்கை உறவு, பொருளாதார அபிவிருத்தி, இரு நாடுகளுக்கும் இடையான பொதுவான வேலைத்திட்டம் ஆகியன பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான காமினி லொக்குகே, பவித்ரா வன்னியாராச்சி, ரமேஷ் பத்திரன, கலாநிதி சுரேன் ராகவன், பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோரும் பங்குபற்றினர்.