விருதுநகர் மாவட்டம் அச்சங்குளம் பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மாரநேரியிலுள்ள மற்றொரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில், ஒரு அறை இடிந்து முற்றிலும் தரமட்டமானதாக கூறப்படுகிறது.
ஆலைக்குள் எத்தனை தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர் என்ற தகவல்கள் தெரியாத நிலையில், ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.