கர்நாடக மாநிலத்தில் கூட்டுக்குடும்பத்தில் வசித்து வந்த 17 வயது சிறுவன் தனது 16 வயது தங்கையினை கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுமி கர்நாடக மாநிலத்தில் தவணகெரே மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த சில தினங்களாக சிறுமி வாந்தி, மயக்கத்தில் இருந்துள்ளார். இதனையறிந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போது பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது.
ஆம் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். பின்பு சிறுமியிடம் விசாரித்துள்ளனர் பெற்றோர். அப்பொழுது கூட்டுக்குடும்பத்தில் வசித்து வரும் நிலையில், குடும்பத்தில் பெரியப்பா மகன் 17 வயது சிறுவன் குறித்த சிறுமியை பலமுறை மிரட்டி இவ்வாறு தவறான செயலில் ஈடுபட்டு வந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
மேலும் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் அண்ணன் என்று தெரிந்ததும் உறவினர்கள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர். மேலும் சிறுவன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது.