விருதுநகர் மாவட்டம், கிழவனேரியில் பத்து வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த அண்ணன் போக்சோவில் கைது செய்யப்பட்டான்.
கிழவனேரி பகுதியிலுள்ள கண்மாய் அருகே 10 வயது சிறுமி உடம்பில் காயங்களுடன் அழுதபடி வந்ததை கண்ட ஒருவர், இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த அப்பகுதி போலீசார், சிறுமியிடம் விசாரணை செய்ததில், மதுரையை சேர்ந்த கோபிநாத் – பாண்டிச்செல்வி தம்பதியின் மகள் என்பதும், சிறுமியின் அண்ணன் முறை கொண்ட மணிகண்டராஜா என்ற கயவன், அவளை கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்று மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளான். பின் சிறுமி மயங்கியதும் காம கொடூரன், பாலியல் வன்கொடுமை செய்ததில், பலத்த காயமடைந்தது தெரியவந்தது.