சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஷங்கரின் மருமகன் ரோஹித் உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித்திற்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. ரோஹித் மதுரை பாந்தர்ஸ் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரோஹித் உள்ளிட்ட 5 பேர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் கிளப்புக்கு பயிற்சிக்கு வந்த 10 ஆம் வகுப்பு மாணவியிடம் தாமரைக் கண்ணன் என்ற பயிற்சியாளர் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சிறுமியை கிரிக்கெட் கிளப் நிர்வாகத்தினர் சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். இதனையடுத்து சிறுமி அளித்த புகாரின் பேரில் கிரிக்கெட் கிளப் உரிமையாளர் தாமோதரன், அவரது மகன் ரோஹித், செயலாளர் வெங்கட் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.