விஜயகாந்திற்கு பின்னர் முறையான திட்டமிடலுடன் முழு நேர அரசியலில் களம் இறங்கப்போகும் விஜய் இனிமேல் சினிமாவில் நடக்கமாட்டார்.
கட்சி அறிவிப்புக்குகான அறிக்கை கூட மக்களை குழப்பாமல் நேரடியாக இருக்கிறது.
இன்றைய தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்ட கட்சியின் ஆதரவாளர்கள் விவாத அரங்குகளை கையாண்ட விதமும் அளித்த பதில்களும் தமிழக அரசியல் களத்தினை எதிர்கொள்ளப்பட்டை தீட்டப்பட்டுள்ளது தெரிகிறது.
ரஜினி போன்று தன் சினிமா மார்க்கெட்டிங்குக்கா கட்சி தொடங்குகிறேன் எனப்பூச்சாண்டி காட்டவோ; அல்லது கருணாநிதியும் , ஜெயலலிதாவும் இறந்த பின்னர் தனது retirement காலத்தில் “மய்யம்” கமலஹாசனை போல காமெடி செய்யவோ இல்லை.
சந்திரசேகர் மற்றும் விஜய் ஆகியோரின் நீண்டகால திட்டமிடல் இது.
தீவிரமாக முழு நேர அரசியலை செய்ய வேண்டும் என்பதை விஜய் ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்திருக்க வேண்டும்.
அதன் வெளிப்பாடு தான் இவ்வளவு PEAK இல் இருக்கும் போதே சினிமாக்கு முழுக்கு என்ற முடிவுக்கு வரக்காரணம்.
இதே வீச்சுடன் பயணித்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து 10சதவீத வாக்கு பெற்று மூன்றாவது கட்சியாவது உறுதி.
கூட்டணி அமைத்தால் எதிர் கட்சியாவது கூட சாத்தியமே.அதற்கு மேலே நிகழ்தல் கூட அதிசயம் இல்லை.
இனிமேல் நடிக்க மாட்டேன் என்பது ஒரு புறம் ஆறுதலாக இருந்தாலும், இந்ந சூப்பர் ஸ்டார் இருக்கை ஒண்டு காலியாக கிடக்கு எண்டு எவரெல்லாம் கிளம்பி வரப்போகிறார்கள் என்று கொஞ்சம் திகிலாத்தான் இருக்கு.