பொதுவாக தற்போது நீரிழிவு நோய் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் நோயாக மாறிவிட்டது.
தவறான உணவு பழக்கங்கள் காரணமாக ஏற்படும் முக்கிய நோய்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இந்த நோய் ஏற்பட்டு விட்டால் மருந்துவில்லைகளால் கட்டுப்படுத்த முடியுமே தவிர முழுமையாக குணமாக்குவது சிரமம் தான்.
உணவுகளால் ஏற்படும் நோய்களை அதே உணவுகளால் மாத்திரமே கட்டுபடுத்த முடியும். நீரிழிவு பாதிப்பை குறைப்பதற்கான மருந்துகள் இருந்தாலும் அதன் பாதிப்பால் அவதிப்படுபவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.
அப்படியாயின் சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்கும் “இலந்தை பழம்” குறித்து தெரிந்து கொள்வோம்.
சில உணவுகள் இயற்கையிலேயே சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் குணம் கொண்டது. இந்த வரிசையில் ஒன்று தான் இலந்தைப்பழம்.
இந்த பழத்தை சாப்பிடுவதால் நோயின் தீவிரமானது குறையும். இலந்தை பார்ப்பதற்கு நிறத்தாலும், சுவையாலும் மாறுபட்டதாக இருக்கும்.
இதிலுள்ள கொட்டைகள் மருத்துவ குணம் கொண்டதாக இருக்கும். இனிப்பு, புளிப்பு சுவை கொண்ட இலந்தை பழம் சாப்பிட்ட பின்னர் கொட்டைகளை தூக்கி எறியாமல் காய வைத்து பொடியாக்கி வைத்து கொள்ளவும்.
1. சர்க்கரை நோயுள்ளவர்கள் காலை எழுந்தவுடன் வெறும் வாயில் ஒரு ஸ்பூன் அளவில் போட்டுக்கொண்டு தண்ணீர் பருக வேண்டும். இப்படி செய்வதால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்படுகிறது.
2. அதே சமயம் பகல் நேரத்தில் மோரில் ஒரு ஸ்பூன் இலந்தை பழ பொடியை கலந்து குடிப்பதால் சர்க்கரையின் அளவு கட்டுபடுத்தப்படும்.
3. இரவில் தூங்குவதற்கு, இலந்தை பழ பொடியை காய்ச்சி வெதுவெதுப்பான பின் பருகலாம். இதனால் வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து போன்ற சத்துக்கள் கிடைக்கின்றன. அத்துடன் உடலுக்கு வலிமையும் கிடைக்கும்.

