சற்று முன்னர் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
La Chapelle-sur-Erdre (Loire-Atlantique) நகர காவல்நிலையத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கிடைக்கப்பெற்ற முதல்கட்ட தகவல்களின் படி, காலை 10 மணி அளவில் குறித்த காவல்நிலையத்துக்கு வருகை தந்த ஆயுததாரி ஒருவன், அங்கிருந்த பெண் காவல்துறை அதிகாரி ஒருவரை கத்தியால் குத்தியுள்ளான். பின்னர் அங்கிருந்து அவன் தப்பி ஓடியுள்ளான்.
படுகாயமடைந்த அதிகாரி மருத்துவமனைக்கு துரிதமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய நபர் வெற்றுக்கால்களால் தப்பி ஓடியுள்ளதாகவும், அவனை தேடும் முயற்சி மிக தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் அறிய முடிகிறது.
80 ஜொந்தாமினர் களத்தில் உள்ளனர்…..