தம்புள்ளை-கல்கிரியகம வீதியில் உள்ள தெல்தின்னவேவ பகுதியில் வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்ததில் பதினெட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து வசிப்பவர்களின் உதவியுடன், பேருந்தில் சிக்கிய பயணிகளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் ஐந்து ஆண்கள் மற்றும் 13 பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காயங்கள் காரணமாக பலரின் நிலைமை மோசமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த பேருந்து வாய்க்காலில் விழுந்ததாக சாரதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.